
பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்தநாள் விழா
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய லெஜெண்ட் சரவணன் தலைமை நற்பணி மன்றம் நிர்வாகிகள் மாநில தலைவர் முத்து துறை மாநில செயலாளர் சுதாகர் தலைமையில் சென்னையில் வில்லிவாக்கம் அரசு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் படிப்பதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன
தொடர்ந்து பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது மாநில துணைத் தலைவர் சீனிவாசராகவன் விழுப்புரம் மாவட்ட தலைவர் திவாகர் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அந்தோணி சூசை சட்ட ஆலோசகர் ஜீவா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்