சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் இணைந்த லெஜெண்ட் சரவணன்.. ஷூட்டிங் பிரமாண்டமாக தொடக்கம்!

  • முகப்பு
  • The Ledgend
  • சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் இணைந்த லெஜெண்ட் சரவணன்.. ஷூட்டிங் பிரமாண்டமாக தொடக்கம்!
lajant- tap banar copy5
26 Apr/24

சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் இணைந்த லெஜெண்ட் சரவணன்.. ஷூட்டிங் பிரமாண்டமாக தொடக்கம்!

 

தி லெஜெண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சரவணன். சென்னை உட்பட பல பகுதிகளில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான இவர், ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தார். அப்போதே டாப் நடிகைகளுடன் ஜோடி போட்ட அவர் தி லெஜண்ட் படத்தில் ஆக்சனில் அசத்தினார். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். 2022-ல் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது 
 லெஜண்ட் சரவணன்  அடுத்த படத்திற்காக இயக்குநரை அதிக தேடுதலுக்கு பிறகு தனது புதிய படம் குறித்த அறிவிப்பை லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள லெஜண்ட் சரவணா ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்களையும் ஷேர் செய்துள்ளார். அதன் படி, தனுஷின் கொடி, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, சூரியின் கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கி வரும் துரை செந்தில் குமார் தான் லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் துரை செந்தில் குமார் இயக்கிய கருடன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அவரது 2 ஆவது படத்துடைய ஷூட்டிங் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த முறை அவர் சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் இணைந்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சரவணன், பட்டாஸ், கருடன் படங்களை இயக்கிய துரை செந்தில் குமாருடன் இணைவார் என்ற தகவல்கள் வெளிவந்தன.

 

இந்த நிலையில், சரவணன் – துரை செந்தில் குமார் இணையும் படத்துடைய ஷூட்டிங் தற்போது தூத்துக்குடியில் வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் விவரங்கள் வெளிவந்துள்ளன.

நடிகர்கள் ஷாம், சந்தோஷ், காளகேயா பிரபாகர் உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். அஜித்தின் வலிமை படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் லெஜெண்ட் சரவணனின் 2 ஆவது படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது லெஜண்ட் சரவணன் ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

1 Comment

Leave A Comment

Cart (0 items)
வணிக வெற்றியிலிருந்து சினிமா மேடைகள்வரை, ஒரு மெய்யான ஐகானின் பயணத்தை நேரில் காணுங்கள்.
info@legendstar.in
Email ID
+91 8144441789
Call Us
Monday - Friday
(10am - 05 pm)