“லெஜண்ட் ஸ்டார் சரவணன்” இரண்டாவது திரைப்படம்

lajant- tap banar1
26 Apr/24

தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தயாரித்து நடித்த ‘லெஜண்ட்’ திரைப்படம், கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி இருந்தனர். நடிகை ஊர்வசி ரவுட்டேலா, நடிகர் விவேக், நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.முதல் திரைப்படமான ‘லெஜெண்ட்’ திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது 2-வது படத்தை அவர் தொடங்கினார். லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘காக்கி சட்டை’, ‘கொடி’, உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘கருடன்’ திரைப்படத்தின் இயக்குநருமான ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, ‘பாகுபலி’ பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ‘லியோ’ புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் நடிக்க, இதர முக்கிய பாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைகிறார்கள்

இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி மற்றும் வட மாநிலங்களிலும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஜார்ஜியா நாட்டில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பு தொடர்பான காட்சிகளை இந்த படத்தின் ஹீரோவான ‘லெஜண்ட் ஸ்டார் சரவணன்  சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

 

 

Leave A Comment

Cart (0 items)
வணிக வெற்றியிலிருந்து சினிமா மேடைகள்வரை, ஒரு மெய்யான ஐகானின் பயணத்தை நேரில் காணுங்கள்.
info@legendstar.in
Email ID
+91 9884023411
Call Us
Monday - Friday
(10am - 05 pm)