
சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் இணைந்த லெஜெண்ட் சரவணன்.. ஷூட்டிங் பிரமாண்டமாக தொடக்கம்!

தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அவரது 2 ஆவது படத்துடைய ஷூட்டிங் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த முறை அவர் சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் இணைந்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சரவணன், பட்டாஸ், கருடன் படங்களை இயக்கிய துரை செந்தில் குமாருடன் இணைவார் என்ற தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில், சரவணன் – துரை செந்தில் குமார் இணையும் படத்துடைய ஷூட்டிங் தற்போது தூத்துக்குடியில் வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் விவரங்கள் வெளிவந்துள்ளன.
நடிகர்கள் ஷாம், சந்தோஷ், காளகேயா பிரபாகர் உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். அஜித்தின் வலிமை படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் லெஜெண்ட் சரவணனின் 2 ஆவது படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது லெஜண்ட் சரவணன் ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.
1 Comment
varadarajanidatas@gmail.com
June 10, 2025உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்